வெள்ளி, அக்டோபர் 29, 2010

மௌனத்தைப் பருகியபடி..

*
காகித நீர்க் கோப்பைகளில்
ஊற்றிக் கொள்ள நேர்ந்த
மௌனத்தைப்
பருகியபடி

உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு
தொடர்கிறோம்

ஒரு
அபத்த உரையாடலை

****

2 கருத்துகள்:

  1. இளங்கோ, "நேர்ந்த" என்ற வார்த்தை இக்கவிதையை ஆழமாக்குகிறது.
    "உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு
    தொடர்கிறோம்"
    இவ்வரிகள் இன்றியே கவிதை முழுமையாக உள்ளது போலவே தோன்றுகிறது. மன்னிக்கவும், இது என் கருத்து மட்டுமே

    பதிலளிநீக்கு
  2. உலர்ந்து போகத் தொடங்கிவிடும் வார்த்தைகளுக்காக ஈரப்படுத்திக் கொள்ள நேரும் உதடுகள் தொடர்ந்து விடுகிறது ஒரு அபத்தமான உரையாடலை.. ( எனவே அதைச் சொல்லித்தான் ஆகவேண்டியுள்ளது நண்பரே..! )
    உங்கள் கருத்து என்னை மேலும் எழுதத் தூண்டும் ஒரு அம்சமாக மாறும்...நன்றி..கோநா..!
    :)

    பதிலளிநீக்கு