திங்கள், ஏப்ரல் 26, 2010

பொம்மைகள் சிரிக்கின்றன..

*
ஐந்து விரல் நுனிகளிலும்
மைப்புள்ளியிட்டு
வரைந்த பொம்மைகள் சிரிக்கின்றன

சாப்பிட அழைத்தும்
கை கழுவ உத்தரவிட்டும்

பிடிவாதமாக மறுக்கிறாள்
பாவம் பொம்மைகள் என்று

' அவைகளுக்கும் நீ உணவு ஊட்டலாம்..
வா... சாப்பிடு ' - என்ற
அம்மாவின் சாமர்த்தியத்தை

விழிகள் கலங்க.. உதடு பிதுங்க
எளிமையாக மறுக்கிறாள்

' வேணாம்மா... அதுங்க செத்துடும்..! '

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஏப்ரல் - 22 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=6196&Itemid=139

2 கருத்துகள்:

  1. :) ரசனைகளை மெல்லிய நூலிழையில் கோர்த்து மாலையாக்கி இருக்கிறது இக்கவிதை... அவ்வழி சொற்களிலேயே.........

    பதிலளிநீக்கு
  2. அருமை அருமை
    குழந்தை மனசு இதானோ?

    பதிலளிநீக்கு