*
கிளம்பிக் கொண்டிருக்கிறேன்
கிளம்பிக் கொண்டிருக்கிறேன்
சிந்தடிக் இழைப் பின்னலில் வேயப்பட்ட இரண்டு பைகள் கையில் இருக்கின்றன
அறை பூட்டப்படுவதற்கு முன்
சுவரில் உணவுகளற்று வரிசையில் விரையும் எறும்புகளின் கருப்பு நிறம் தொந்தரவு செய்கிறது
சுவரில் உணவுகளற்று வரிசையில் விரையும் எறும்புகளின் கருப்பு நிறம் தொந்தரவு செய்கிறது
படிகளின் எண்ணிக்கை இறங்கும்போது குறைவாகவும்
ஏறும்போது கூடுதலாகவும் மாறிப்போகிற விந்தையை பர்ஸில் மடித்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்
ஏறும்போது கூடுதலாகவும் மாறிப்போகிற விந்தையை பர்ஸில் மடித்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்
அற்பமாய் பெய்த நேற்றிரவின் மழைத்தூறல் போதுமானது
ஆள் இல்லாத எதிர்வீட்டின் ஓட்டுக்கூரையில் முளைத்துவிட்ட அரச செடிக்கு
ஆள் இல்லாத எதிர்வீட்டின் ஓட்டுக்கூரையில் முளைத்துவிட்ட அரச செடிக்கு
தெரு நீர்த்தேக்கத்தில் மிதந்து நெளிகிற
மின்கம்பத்தின் உடைந்த பல்பு டூம் அலட்சியப்படுத்துகிறது வான் வெளிச்சத்தை
மின்கம்பத்தின் உடைந்த பல்பு டூம் அலட்சியப்படுத்துகிறது வான் வெளிச்சத்தை
மார்க்கெட் வீதியெங்கும் மனிதத் தலைகளும்
தலைகளின் வாயில் பேரங்களும்
பேரத்தில் படியாத வசவுகளின் ருசி கூடிய கழிவுகளும்
சாக்கடையோட்டமாகி கணுக்காலை நக்கும் நாவின் நிதானத்தில் அவசரப் பிசுபிசுப்பு
தலைகளின் வாயில் பேரங்களும்
பேரத்தில் படியாத வசவுகளின் ருசி கூடிய கழிவுகளும்
சாக்கடையோட்டமாகி கணுக்காலை நக்கும் நாவின் நிதானத்தில் அவசரப் பிசுபிசுப்பு
ஒரு பைக்குள் இன்னொரு பையை ரொப்பித் திரும்பியபோது
நீர்த்தேக்கத்தில் அசைந்து கொண்டிருக்கிற கருங்காகத்தின் மீது அசையும்
அலையை மிதித்துக் கடக்கிறேன்
எறும்புமருந்து பாக்கெட் வாங்க மறந்தது ஞாபகத்துக்கு வருகிறது
ஏறும்போது எண்ணிக்கை கூடுதலாகிப் போகும் படிகளில் ஏறிக்கொண்டிருந்தேன்
அப்போது
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக