வெள்ளி, ஏப்ரல் 27, 2012

பேரன்பின் இருட் காடு

*
மௌனம் கலையாத
பெருந்தவக் கோட்பாட்டு மரத்தின் கீழ்
பேரன்பின்
இருட் காட்டுக்குள்
தனித்து உட்கார்ந்திருக்கப் பணித்தாய்

சொற்ப வெளிச்சம் சுமந்து
என்னைச் சுற்றிப்
பறந்துக் கொண்டேயிருக்கிறது

உனது
மின்மினிச் சொற்கள்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 30 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5550


1 கருத்து:

  1. அருமை வரிகள்... பாராட்டுக்கள்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை…

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

    பதிலளிநீக்கு