புதன், ஏப்ரல் 30, 2014

அது - அதை..

*
பெய்து அடங்கும்வரை
என்னைப் பழக்கி வைத்திருக்கிறாய்

ஈரம் மின்ன கூர் பல் காட்டி
முறை வைத்துக் கூப்பிடுகிறது
இந்த இரவின் உச்சரிப்பை நிராகரிக்கும்
உலர்ந்த குரலோடு - அது

தனிமை சுவர் துளைத்துப் படரும் பாசிக் கரைசலில்
கண்ணீர் பெய்து அடங்கும்படி
பழக்கியிருக்கிறாய் - அதை

அது நீயாகும்போது
அதை நானாகிறேன்

முறைவைத்தே கூப்பிடுகிறாய்

****

1 கருத்து:

  1. எத்தனை முறை படித்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கோணத்தை காண்பிக்கும் இக்கவிதையை படிப்பதை இன்னும் நான் விடவில்லை அண்ணா தி பெஸ்ட் ஆப் யூவர்ஸ் and I'm TERRIBLY OBSESSED to this

    பதிலளிநீக்கு