*
சிறகுகள் நனைய அதன் ஒடுங்கிய அடுக்குகளில் கருந்துளியாகி உருளும் மழைநீரோடு
பால்கனி கைப்பிடிக்கம்பியில்
துருப்பிடித்த நிறத்தில் நடுங்கி உட்கார்ந்திருந்த
காலை நேரக் காகத்தின் அலகில் மழைப் போர்த்திய
வானின் பகல் ஒளி
அசைவற்று நின்றுவிட்ட என் மங்கிய நிழலின்
விளிம்புத் தொட்டக் கணத்தில்
சிறகு உதறிப் பறந்தத் துடிப்பில்
நீர்ப்புள்ளிகள் பாதவிரல் மோதி உயரே தூக்குகிறது
மழைக்குள் தாவும்படி
*****
நன்றி : ' யாவரும். காம் ' இணைய இதழ் [ நவம்பர் - 20 - 2013 ]
http://www.yaavarum.com/archives/1622
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக