சனி, ஜனவரி 16, 2016

தன் இயல்புகளை மீறும் உடல் மொழி..

*
நடுக்கத்தைப் பற்றியா 
நாம் பேசிக் கொண்டிருந்தோம்  

சந்தேகத்துக்குரிய ஒரு வாக்கியத்தில் 
நிஜ அர்த்தங்களை 
வெளிப்படுத்தாத கெட்டிக்கார வார்த்தைகள் 
ஒன்றிரண்டு மௌனம் காக்கின்றன 

ஓர் உடல்மொழி தன் இயல்புகளை மீறும் விதத்தில் 
எப்படியும் கொண்டிருக்கிறது 
தந்திரம் மிகுந்த புறக்கணிப்பை 

ஆரத்தழுவி முதுகில் தட்டிக் கொடுப்பதில் 
மிக லேசாக நடுங்குகிறது 
மென் இதயம் 

சின்னஞ்சிறு சுவைத்தலிலிருந்து மீளும் உதடுகள் 
நடுங்குகிறது 
அந்த முத்தத்தைப் புரியாமல் 

பிரிவின்போது அழுத்தமாய் கண் ஊடுருவி 
விலகும் பார்வை 
அது ஒரு பிரிவுதான் என்பதை 
காலம் தாழ்ந்து உணர்த்துகிறது

நாம் 
நடுக்கங்களைப் பற்றித்தானே 
பேசிக் கொண்டிருக்கிறோம் 
 
****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக