வியாழன், டிசம்பர் 22, 2011

பிரத்யேக நிறம் சூழ்ந்த நடைபாதை..

*
மரணத்தின் குறிப்பேட்டில்
கையெழுத்து வாங்கும் தாதி
அவசரமாகத்
தவிர்த்து விடுகிறாள்
கேள்விகளையும்
அதற்குரிய பார்வைகளையும்

திறந்து அவளை உள்வாங்கிக் கொள்ளும்
கண்ணாடிக் கதவுக்கு அப்பால்
நிதானமாய் நீள்கிறது
பிரத்யேக நிறம் சூழ்ந்த ஒரு நடைபாதை

நம் கைகளோடு தங்கிவிடுவது
ஒரு பேனா மட்டுமே

******

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் [ டிசம்பர் - 26 - 2011 ] 


http://www.navinavirutcham.blogspot.com/2011/12/blog-post_26.html

1 கருத்து:

 1. //மரணத்தின் குறிப்பேட்டில்
  கையெழுத்து வாங்கும் தாதி
  அவசரமாகத்
  தவிர்த்து விடுகிறாள்
  கேள்விகளையும்
  அதற்குரிய பார்வைகளையும் //
  இந்த வரிகளே போதும்


  அருமையான கவிதை அண்ணா...
  தங்களின் வார்த்தைகளின் கோர்வைகளை
  படிக்கும் ஒவ்வொரு முறையும்
  எனக்கு ஒவ்வொரு அனுபவம் தருகிறது

  nallavankavithaigal.blogspot.com

  பதிலளிநீக்கு