வியாழன், டிசம்பர் 22, 2011

காற்றில் சிறகைத் தொட்டபோது..

*
மரணத்தைப் பரிசளித்த
உங்கள் இரவில்

வீட்டின் கிணற்றுப் பக்கம்
இருக்கும்
வாதாம் மரத்தின் கிளையில்
ஓர் ஆந்தையாக உட்கார்ந்திருந்தேன்

என் உடலை கட்டிப் பிடித்து
அழுது தீராதக் கண்ணீரின்
ஈரப் பரவல்
காற்றில் என்  சிறகைத் தொட்டபோதும்
சற்று நேரம் வெறித்தபடி
காத்திருந்தேன்

என்னைக் கவனித்த நொடியில்
நீங்கள் 
'சூ....' என்று விரட்டிய கணத்தை
அலகில் கொத்தித் தூக்கிப் பறந்தேன்

*****

2 கருத்துகள்:

  1. நன்றி..!
    தென்காசித் தமிழ் பைங்கிளி
    தொடர்ந்து ஒரே மூச்சில் முதல் பக்கத்தில் இருக்கும் பத்துக் கவிதைகளையும் வாசித்து பின்னூட்டம் இட்டு நீங்கள் அளித்திருக்கும் ஊக்கத்துக்கு ஒரு இனிய வணக்கம்.

    பதிலளிநீக்கு