திங்கள், ஜனவரி 23, 2012

ஒரு சிறிய கைத் தட்டலுக்கு காத்திருப்பவன்

*
ஒரு சிறிய கைத் தட்டலுக்கு காத்திருப்பவன்
யாருமற்ற வராண்டாவின் தனிமையை
அளந்து கொண்டிருக்கிறான்

சொற்ப வெயில் பூசிய படிகளில் அசையும்
நிழல் மீது உட்கார்ந்திருக்கிறான்

அழைப்பினூடே உச்சரிக்கப்படும்
வசவு வார்த்தைகளின் வெப்பத்தை
தன் புறங்கையின் நரம்பிலிருந்து
நீவிக் கொண்டிருக்கிறான்

ஒரு சிறிய கைத் தட்டலுக்கு காத்திருப்பவன்
கடற்கரை அலைகளோடு
ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறான்

அவன் கணுக்கால் வரைத் தொட்டு நனைத்து
மீள்கிறது வெண்ணிற நுரைகள்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 2 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5143கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக