வியாழன், ஜனவரி 14, 2010

கணம் இடறிக் கவிழும் குவளைக் கண்ணீர்..

*

எவரோடும் சிநேகம் கொண்டுவிடும்
வேட்கையில்..
சிறகு அசைக்கும் மனத்தின் வானில்..
புதிர்களோடு
எரிந்து கடக்கின்றன..
வால் நட்சத்திரமென கற்களும்
கரும்பள்ளமென சம்பவங்களும்..

மினுக்குதலுக்கான ஒளிப்புள்ளியென
சிலாகித்த இரவுகளும் உண்டு..
நட்சத்திரங்களைப் பற்றிய படிமங்களாய்..

கணம் இடறிக் கவிழும்
குவளைக் கண்ணீரில்..
சிறகுகளின் நனைதலை
குறிப்பெடுக்கும் கிரகங்கள் எதுவும்
இருப்பதை..
சிறகு விரும்புவதில்லை..

ஒற்றை இறகின் பிசிர் நுனியில்..

இருள் தன் நுண்மையை
ரகசியப் பெட்டகமொன்றின்
உள்ளறையில் ஒளித்து..

நிதானமாய் சூரியனைப் பூசி
சாவியை உருக்கி விலகுகிறது..
ஆழமெனக் கற்பிதம் செய்யப்பட்ட
பிரபஞ்சத்தின் எல்லைக் கடந்து...

சொல்லிவிடமுடியாதக் கேவல்களும்..
உதடுகள் இறுகப் பற்றிக்கொண்ட சொற்களும்..
மனச் சிறகில்..
அடுக்கடுக்காய்..சேகரமாகி..
வலுக்கூட்டுகிறது..

மேலும் பறப்பதற்குரிய திசைகளை..
முன்னகர்த்தி... இருள் விரித்து...

*****

( உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் 'உரையாடல் கவிதைப் போட்டிக்காக' எழுதியது. )

7 கருத்துகள்:

  1. வெற்றி பெற வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப நல்லா இருக்குங்க.

    வெற்றி பெற வாழ்த்துக்கள் இளங்கோ!

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  4. கணம் இடறிக் கவிழும் குவளைக் கண்ணீர்.. enna vaarthi? arputham, itharkaagave parisu kodukkalam..

    பதிலளிநீக்கு
  5. வெற்றி பெற வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு