ஞாயிறு, ஜூன் 27, 2010

அடர்ந்து பொழியும் நீர்த்திரை..

*
மௌனத் துளியின் நீர்மைக்குள்
அடைபட்டுத் துழாவுகிறது

மரணிக்கத் திணறும் ஒரு நினைவு

சேமிப்பதில் உதிரத் தொடங்கும் பருவம்
மழைச் சிதறலென நிலம் தொட
ஏந்திக் கொள்ள மறுக்கிறாய் என் ஏகாந்தத்தை

ஒவ்வொரு நொடிக்குள்ளும் வளருகிறது
சூழ் கொண்டு பெருகும் கேவல்

மனம் உடைந்து வெளிப்படும்
கரும்பாறைச் சரிவில்
கசிந்துருகும் காட்சியாகிப் போகிறேன்
அடர்ந்து பொழியும் நீர்த்திரையின்
வெண்மையோடு..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜூன் - 21 - 2010 ]

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3042

2 கருத்துகள்:

  1. எப்பா,இந்த பக்கம் வந்தாலே பயமால யிருக்கு!!

    பதிலளிநீக்கு
  2. ஆறுமுகம்..!
    தைரியமா என் கையப் பிடிச்சிக்கோங்க பயப்பட ஒண்ணுமில்ல..

    :)

    பதிலளிநீக்கு