செவ்வாய், டிசம்பர் 28, 2010

ஒரு மழை நாளுக்குரிய பருவ மேகங்கள்..

*
நேற்றைய பயணமாகிப் போனாய்
நீ
கோடிழுத்துப் போன
என் பாதையில்

ஒவ்வொரு
சின்னஞ்சிறிய கற்களும்
பூக்களை சுமக்கும் செடிகளை
அண்டுகின்றன
பெருவிரல் நகம் தெறித்து

திரும்பும் எண்ணமற்று நீளும்
காட்சிகளை ஓவியமாகத் தீட்டி
வைத்திருக்கிறாய்
உன் தனிமை கேன்வாஸில் அதன்
முனைகளில் சட்டம் ஏற்றி

நம் உட்சுவர்களின் பூச்சை
உப்பச் செய்யும் ஒரு மழை நாளுக்குரிய
பருவ மேகங்களை
இவ்வழியெங்கும் கவிழச் செய்கிறேன்

இரவின் குடுவையிலிருந்து
அது சொட்டத் தொடங்குகிறது
பனித் துளியென
உன் ஜன்னல் தேடி

****



2 கருத்துகள்:

  1. உங்களின் கவிதைகளில் இடைவிடாது இயங்கிக்கொண்டிருக்கும் படிமங்கள் அனைத்தும் வாவ் ரகம்!!!!

    பதிலளிநீக்கு