வெள்ளி, ஜூலை 30, 2010

சொல்ல விருப்பமற்று விடுபட்ட பட்டியல்..

*
காத்திருப்பதாக
சொல்லிக்கொண்டிருந்த என் நிழலுக்கு
புரியவைக்க முயன்று கொண்டிருந்தேன்..

என் நிர்ப்பந்தங்களை..
நான் மையப்படுத்தப்பட்டிருக்கும் அடுக்குகளை..
பொருளாதார நெகிழ்வுக்குள்
நசுங்க பழகிக்கொண்ட கனவுகளை..
முத்தங்கள் மறுக்கப்பட்ட காதலை..
வரையறைக்குள் சிந்திக்க பிரயோகப்படுத்தப்பட்ட
உத்தரவுகளை..

இன்னும் சொல்லாமல்
அல்லது
சொல்ல விருப்பமற்று விடுபட்டு போன
பட்டியலின் நீளத்தை
அதன்
கடைசியிலிருந்து கடந்து வருவதற்குள்..

முன்னமே வந்து
காத்து நிற்பதாக சொல்லிக்கொண்டிருக்கும்
என் நிழலுக்கு..
புரியவைக்க முயன்று கொண்டிருக்கிறேன்..

****

2 கருத்துகள்:

  1. / இன்னும் சொல்லாமல்
    அல்லது
    சொல்ல விருப்பமற்று விடுபட்டு போன
    பட்டியலின் நீளத்தை
    அதன்
    கடைசியிலிருந்து கடந்து வருவதற்குள்.. /


    இது தான் உண்மை, வேதனை..

    பதிலளிநீக்கு
  2. காத்து நிற்பதாக சொல்லிக்கொண்டிருக்கும்
    என் நிழலுக்கு..
    புரியவைக்க முயன்று கொண்டிருக்கிறேன்..

    sema!!

    பதிலளிநீக்கு