வெள்ளி, ஜூலை 30, 2010

கரைந்தோடும் நிமிடங்களின் உப்புத் தன்மை..

*
இறுகிக் கட்டிக் கொண்ட முழங் கால்களுக்குள்
புதையுண்ட முகமும்
குலுங்கும் முதுகும்..

ஆறுதல் வார்த்தைகளை ஸ்தம்பிக்கச் செய்து
உதடுகளைப் பூட்டி விடுகின்றது..

கரைந்தோடும் நிமிடங்களின்
உப்புத் தன்மையை
தொடரும் ஒரு மௌனத்தின் நீர்மை
தேக்குகிறது மீளாத் துயரின் நெஞ்சுக் குழிக்குள்..!

****

5 கருத்துகள்:

  1. / ஆறுதல் வார்த்தைகளை ஸ்தம்பிக்கச் செய்து
    உதடுகளைப் பூட்டி விடுகின்றது.. /

    Super......

    பதிலளிநீக்கு
  2. பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
    ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
    இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
    உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

    பதிலளிநீக்கு
  3. நேர்த்தியான கவிதை வரிகள்....

    //கரைந்தோடும் நிமிடங்களின்
    உப்புத் தன்மையை
    தொடரும் ஒரு மௌனத்தின் நீர்மை
    தேக்குகிறது மீளாத் துயரின் நெஞ்சுக் குழிக்குள்..!//

    அற்புதம்.... என்று சொல்லத்தடுக்கிறது, வரிகளில் உள்ள சோகம்...
    என் நெஞ்சுக்குழிக்குள் பாய்ந்துவிட்டது கவிதையின் சோகம்...

    பதிலளிநீக்கு
  4. நன்றி..!
    வினோ / வெறும்பய / ஸ்வேதா

    நன்றி..!
    கவிநா

    பதிலளிநீக்கு