திங்கள், ஏப்ரல் 27, 2009

முதல் சந்திப்பில்..

*

கரையிலமர்ந்தபடி..
உப்புக் காற்றை
சுவாசித்த..
நம்
உரையாடலின்
வெப்பத்தை..

குழந்தைகளின்..
வர்ண பலூன்கள்
சுமந்து சென்றன..

வால் நீட்டி..
காற்றேகிய..
சிறு
காகிதப் பட்டங்களின்
நூல் வெளியில்..

ஊர்ந்தேறியது..
நம்
வார்த்தைகள்..

சாம்பல் பூசிய
கடல் வானின்..
மேகமற்ற விளிம்பு வரை..

பார்வையின்
பயணம்..
தொட்டு மீண்ட
கணத்தில்..

மீன்களின் செதி லொத்த
சிரிப்பொன்றை
கண்களில்
வைத்திருந்தாய்..

இருட்டின் பசியை
இட்டு நிரப்பிக் கொண்டிருந்தது
உன் பேச்சும்
என் பேச்சும்..

அலை நுரைகள்..
மெல்ல முயன்று
பாதம் தொட
யத்தனித்தன..

தொண்டை காய்ந்திருக்கும்
வாய்ப்பாக..

நுரையீரல் நிரப்ப
சிகரெட் வேண்டுமென..
நீ
சொன்ன போது

மணல் தட்டி
எழுந்தபடி
காற்று விரட்டினோம்..

சாலையோரம்..
நின்றபடியும்..
நீண்டதொரு பேச்சு..
கண் கவியும்
தூக்கமொன்று
உன்னைத்
தொடும்வரை..

பஸ்ஸி லேறி
கையசைத்து..
ரீங்கரித்துக்
கொண்டே இருந்தது..

உன் சிரிப்பு...

நான்
வீடு திரும்பிய
பின்னும்..!

****

7 கருத்துகள்:

  1. "கரையிலமர்ந்தபடி..
    உப்புக் காற்றை
    சுவாசித்த..
    நம்
    உரையாடலின்
    வெப்பத்தை..

    குழந்தைகளின்..
    வர்ண பலூன்கள்
    சுமந்து சென்றன "





    அருமை நண்பரே ,
    கடல் மணலில் நடந்து,
    காற்று வாங்கி ,
    அலை நீரில் கால் நனைத்த என்னுடைய அனுபவத்தை தங்கள் கவிதை அழகாக ஞாபக படுத்துகிறது....

    பதிலளிநீக்கு
  2. சாம்பல் பூசிய
    கடல் வானின்..
    மேகமற்ற விளிம்பு வரை..

    பார்வையின்
    பயணம்..
    தொட்டு மீண்ட
    கணத்தில்..

    அருமை...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. மீன்களின் செதி லொத்த
    சிரிப்பொன்றை
    கண்களில்
    வைத்திருந்தாய்..

    அருமை

    பதிலளிநீக்கு
  4. அலை நுரைகள்..
    மெல்ல முயன்று
    பாதம் தொட
    யத்தனித்தன.

    superb wordings

    பதிலளிநீக்கு
  5. urayadalin veppathai
    sumakkum baloongal

    vaalthukkal tholare

    -nesamithran

    nesamithran.blogspot.com-nesamithran kavithaigal

    பதிலளிநீக்கு
  6. இருட்டின் பசியை
    இட்டு நிரப்பிக் கொண்டிருந்தது
    உன் பேச்சும்
    என் பேச்சும்..

    அலை நுரைகள்..
    மெல்ல முயன்று
    பாதம் தொட
    யத்தனித்தன.......

    *கடலலையும் உன் சிநேகம் கண்டு பொறாமை கொண்டதோ?

    பதிலளிநீக்கு