புதன், ஏப்ரல் 22, 2009

மெட்ரோ கவிதைகள் - 4

*
வெயில் கூசும்
பகலிலும்
கொண்டைச் சிவப்பொளி
உமிழ மறப்பிதில்லை
அரசு
கார்கள்..

அதிகாரப் பசியோடு..
அரைபட்டு
விரைந்து சுழலும்
சக்கரங்களில்..

பொடிந்து
நொறுங்குகின்றன..
சில நூறு
இலைச் சருகுகள்..

நிறமிழந்து
அழுக்கூறிய உடையும்..
சிக்குப் படிந்த
கூந்தலுமாய்...

ஒருத்தி..
இடுப்புக் குழந்தையுடன்..

தெருவோரம் நின்று..
வேடிக்கைப் பார்க்கிறாள்..

தலைமேல்..
தடதடத்தோடும்
அதிசய ரயிலை..!

*****

1 கருத்து:

  1. அழகான கவிதை இளங்கோ...
    மனதைத் தொடுவதாக இருக்கிறது..
    சமுதாயத்தின் முரண்களில் சருகுகள் மட்டுமா நசுங்குகின்றன??

    பதிலளிநீக்கு