வெள்ளி, ஜூலை 30, 2010

பிரிவின் வாசம்..!

*
நிழல் பிராவகத்தில்
மூழ்கும் நரகமொன்றின்
பிரதான வழிச் சாலையில்
தனித்து நிற்கிறேன்..

என்
மாம்ச உரத்தில்
பதியனிட்டுச் செழித்து
காலக் கிளையில் கொய்த மலர்களை
கைகளில் ஏந்தி..
அதன் பெயர் தெரியா வர்ணங்களோடு நிற்கிறேன்..

நினைவின்
சிறு குடுவைக்குள்ளிருந்து தெளிக்கப்படுகிற
சிலத் துளித் திரவத் திவலையில்
புறப்படுகிறது..

பிறவியெனும் வாசனையும்..

அதை
நுகர்ந்தபடி..

இதயம் நுழையும் மரணமும்..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜூலை - 26 - 2010 ]

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3210

2 கருத்துகள்:

  1. ஹ்ம்ம்.... எந்த வரியைப்பற்றி பின்னூட்டமிட....!!!
    அப்பப்பா என்ன ஒரு வார்த்தைப்ப்ரயோகம்..?!

    //நினைவின்
    சிறு குடுவைக்குள்ளிருந்து தெளிக்கப்படுகிற
    சிலத் துளித் திரவத் திவலையில் புறப்படுகிறது..
    பிறவியெனும் வாசனையும்.. அதை நுகர்ந்தபடி..
    இதயம் நுழையும் மரணமும்..!//

    இதயம் நுழைந்த கவிதையும் கூட... ரசித்தேன்... ரசிகையானேன்....

    பதிலளிநீக்கு