வியாழன், ஜூலை 29, 2010

நீல நிறம் படர்த்தும் வளைவுகள் தோறும்..

*
தாழ்வார ஈரத்தில்
மேலும் சில சுவடுகளைச் சொட்டுகிறது
எனக்குப் பிரியமான மழை..

நீயில்லாத இரவோடு கைக் கோர்த்து
ஜன்னல் வழியே கசிந்து வெளியேறுகிறது
உனக்குப் பிடித்த இசை..

அசைவுறும்
ஒவ்வொரு சிறு பொருளும்
காற்றில் எழுதுகிறது
இந்த அறையின் வெறுமையை..

மெல்லிய நீல நிறத்தைப் படர்த்தும்
விளக்கொளி..
வளைவுகள் தோறும் ஒளிர்ந்து..

உன் நினைவை மீட்டு..

வரைய முயல்கிறது
ஓர்
ஓவியமாய்..!

****

4 கருத்துகள்:

  1. //நீயில்லாத இரவோடு கைக் கோர்த்து
    ஜன்னல் வழியே கசிந்து வெளியேறுகிறது
    உனக்குப் பிடித்த இசை..//

    கவிதை வரிகள் அசத்தல். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. / நீயில்லாத இரவோடு கைக் கோர்த்து
    ஜன்னல் வழியே கசிந்து வெளியேறுகிறது
    உனக்குப் பிடித்த இசை../

    / உன் நினைவை மீட்டு..

    வரைய முயல்கிறது
    ஓர்
    ஓவியமாய்..! /

    அழகு இளங்கோ....

    பதிலளிநீக்கு
  3. அருமை நண்பரே...

    ஒவ்வொரு வரியும் இதயம் தொடுகிறது...

    பதிலளிநீக்கு
  4. நன்றி..!
    மதுரை சரவணன் / வினோ / வெறும்பய

    வாசித்த நெஞ்சங்களுக்கு நன்றி..!!

    பதிலளிநீக்கு