சனி, செப்டம்பர் 25, 2010

மெட்ரோ கவிதைகள் - 85

*
முதலில்
டிபன் கடை என்றார்கள்
பிறகு
ஹோட்டல் என்றார்கள்
பிறகு
ரெஸ்டாரன்ட் என்றார்கள்
பிறகு
Cuisine என்றார்கள்
பிறகு
கேட்டரிங் என்றார்கள்
பிறகு
பஃபே என்றார்கள்
இப்போது
பாஸ்ட் புட் என்கிறார்கள்
மீண்டும்
டிபன் கடை என்பார்கள்

முதலில் இருந்து
நடுவிலும்
பிறகு மீண்டும்

இனியும் கூட...

எல்லா இடத்திலும்..

பசிக்காக
கையேந்தும் மனிதன்
நிற்கிறான்

****

2 கருத்துகள்:

  1. கால மாற்றத்தைப் பற்றி ஏதோ சொல்கிறீர்கள் போல, என்று வாசித்துக்கொண்டிருந்தேன்...

    //இனியும் கூட...

    எல்லா இடத்திலும்..

    பசிக்காக
    கையேந்தும் மனிதன்
    நிற்கிறான்//


    இறுதி வரிகள் "நச்" என்றிருந்தன... அருமை...

    --
    அன்புடன்
    கவிநா...

    பதிலளிநீக்கு
  2. @ கவிநா..

    தொடர்ந்து என் கவிதைகளுக்கு நீங்கள் எழுதும் விமர்சனங்களுக்கு மனமார்ந்த நன்றி..!

    பதிலளிநீக்கு