சனி, செப்டம்பர் 25, 2010

மெட்ரோ கவிதைகள் - 86

*
' ஏன்யா சாவுற காலத்துல
எங்க உயிரை வந்து வாங்குறீங்க..
எனக்கு என்ன எட்டு கையா இருக்கு?
லைன்ல வாய்யா பெருசு.. ' -

ஒவ்வொரு மாதமும்
ஒரு
அரசு வங்கியில்
பென்ஷனுக்காக முண்டும்
முதியவர்கள்
போர்க்கால பதட்டத்தோடு
எதிர்கொள்கிறார்கள்
தங்கள் சொற்ப தொகையை..

Customer is our first person - என்றபடி
வரிசையின் கடைசியில்
தொங்கிக் கொண்டிருக்கிறார்
நிரந்தரமாய்
ஒருவர்

****

2 கருத்துகள்:

  1. அடேங்கப்பா என்னமா எழுதுறிங்க...ஒரு வருசத்துக்கு 500 இடுகைகளுக்கு மேல ...ஹஹ்ஹ்ஹ :) உக்காந்து படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு