திங்கள், நவம்பர் 22, 2010

என்னொருவனைத் தவிர..

*
எருதின் பலத்து வீசும்
பெருமூச்சில்
சிதறிப் பறக்கிறது
மனப்புழுதி

மரணக் கடிதம்
கூரியரில் வந்தபோது
வழியனுப்பி வைக்க பரபரப்பாகிறது
சுற்றமும் நட்பும்

என்னொருவனைத் தவிர
எல்லோராலும் வாசிக்கப்பட்ட நான்
ஹாலில் கிடத்தப்படுகிறேன்

பலத்து வெளியேறிய
ஒரு
பெருமூச்சு மட்டுமே
நினைவிலிருக்கிறது

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ நவம்பர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3721

2 கருத்துகள்:

  1. "மரணக் கடிதம்
    கூரியரில் வந்தபோது" :) :)

    "என்னொருவனைத் தவிர
    எல்லோராலும் வாசிக்கப்பட்ட நான்
    ஹாலில் கிடத்தப்படுகிறேன்"
    - ஏனென்று தெரியவில்லை இவ்வரிகள் author is dead என்ற "roland barthes " கோட்பாட்டை நினைவுபடுத்துகின்றன. :)

    கடைசி பாராவில் இறப்பிற்குப் பின் நினைவு எப்படி கடைசி பெருமூச்சுடன் மட்டும் இருக்குமென்ற கேள்வி எழுகிறது. கவிதையின் முதல் பாராதான் அதற்கான பதிலோ இளங்கோ?

    பதிலளிநீக்கு
  2. இளங்கோ,
    "எருது"க்குப் பதிலாக "எருமை" என்றிருந்தால் அது அருகில் வந்துவிட்ட மரணத்தின் படிமமாக மாறி இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு