செவ்வாய், மே 26, 2009

தளிர் நுனிகளின் ரகசியங்கள்...

*

நண்பர்கள் அற்ற
ஒரு பகலின்
பள்ளத்தாக்கில்..

பாத ரேகைகள்
நசுக்கும்
சிறு பூக்களின்
வாசம்
நுகர்ந்தபடி...

மனசின்
காடு..
சூழ்ந்த
பசுங் கொடிகளை

நினைவின்
சடையாகப் பின்னி

வழித்தடம்..
எழுதிக்கொண்டே..

பனித்துளி
தேடும்போது...

ஈர வேர்களின்...
தளிர் நுனிகளை..
ரகசியமாய்..
இழுத்துக்கொண்டாய்..

உன்னை
கடந்து போய்விட..

என்னை
தவிர்த்தல் பொருட்டு..

****

2 கருத்துகள்:

  1. நல்ல கற்பனை, கவிதை வடிவில் அழகாக விரிந்திருக்கிறது

    பதிலளிநீக்கு
  2. என் வலைப்பூவிற்கு வந்த பட்டாம்பூச்சியை உங்களதிற்கு அனுப்பியிருக்கிறேன் :))

    பதிலளிநீக்கு