ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

தெருவோரக் குறிப்புகள் - 1

*

அகன்று விரிந்து
செம்பழுப்பு நிறத்தில் உதிரும்
தேக்குமர இலையை..

சலிப்போடு
கையிலேந்துகிறது..

தார் சாலையில்
தகிக்கும்
மத்தியான வெயில்..!

****

4 கருத்துகள்:

  1. ஏன் சலிப்போடு ?களிப்போடு தான் ஏந்தும்

    பதிலளிநீக்கு
  2. இது நகரத்து வெயிலின் சலிப்பு..!

    பதிலளிநீக்கு
  3. மத்யான வேளையின் வெயில் எத்தனை அழகு தெரியுமா .அது சலித்துகொள்ளாது.
    கவிதையும் அழகு

    பதிலளிநீக்கு
  4. தோழி..!
    கவிதையில் வெய்யிலுக்கு ஏற்பட்ட சலிப்பு.. உதிர நேர்ந்த தேக்கு மரத்தின் செம்பழுப்பு இலையை எண்ணி..
    ( வெயில் பற்றி மனிதர்களுக்கு ஏற்படும் சலிப்பு இங்கு குறிப்பிடப்படவில்லை...)
    ஆம்..மத்தியான வெயில்...வெகு அழகு தான்..
    கவிதை ரசிப்புக்கு நன்றி..!
    [ மற்ற கவிதைகளுக்கான உங்களின் பின்னூட்டங்களுக்கும் நன்றி..]
    :)

    பதிலளிநீக்கு