திங்கள், மே 31, 2010

இரவுகளின் சாவித்துவாரம்

*
வாசல்கள் திறந்திருக்கின்றன
பூட்டிச் செல்லும் தருணங்கள்
நம்மை வழிமறிப்பதில்லை..

இரவுகளின் சாவித்துவாரங்களில்
பகல்கள் எப்போதும்
ஒரு
கள்ளச் சாவியைப் போல் திணறுகின்றன

உறவுகளுக்கான ஒப்பந்தங்களை
பாதுகாக்கும் பொறுப்பை
கதவுகள் ஏற்றுக் கொள்கின்றன

ரகசியமென முடிவாகும்
நினைவுகளின் ஆவணக் குறிப்புகளை
கவனங்கள் கொண்டு கோர்க்கும்
கோப்புகளாக்குகிறோம்

மனமென்னும்
பிரமாண்ட கட்டிடத்தின் வாசலில்
வேலையற்ற வாட்ச்மேனைப் போல
நெடுங்காலமாய்
உட்கார்ந்திருக்கிறோம்..!

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் [ மே - 2 - 2010 ]

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31005024&format=html

4 கருத்துகள்:

  1. நன்றி..!
    முத்துலெட்சுமி

    பதிலளிநீக்கு
  2. மனமெனும் கட்டிடம் இங்கு வாசலுக்கும் கண்கள் இருக்கக்கூடும்
    நமக்கான தநிப்போழுதுகள்கூட தனிமைப் பட்டுப் போவதில்லை
    எங்கும் மஊடையதான எதோ ஒன்று நமக்குத் துணையாக இருந்து விடுகிறது.....!!

    பதிலளிநீக்கு
  3. பகிர்வுக்கு நன்றி..!
    கலாசுரன்

    பதிலளிநீக்கு