வெள்ளி, அக்டோபர் 29, 2010

எரிந்து கீழிறங்கும் நட்சத்திரங்கள்..

*
திசைகளோடு வளைகிறது மனம்
பயணத்தின் கூர்மைப் பட்டு
துளையும் இரவில்

சிறு பிளவோடு கசிகிறது
நிலவு

எரிந்து கீழிறங்கும்
நட்சத்திரங்கள்
பூசிச் செல்கின்றன

உரையாடலின் காயத்தில்
புரியாத வார்த்தைகளை..

****

7 கருத்துகள்:

  1. எரிந்து கீழிறங்கும் நட்சத்திரங்களைப் பார்த்தால், நினைவுகள் மறந்து போகும் என்பர் .சதிராடும் வார்த்தைகளில் புதிர் போடுகின்றன உங்கள் கவிதைகள் ..மிக ரசித்தேன்..புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  2. நன்றி..!
    ஜெயசீலன் :)

    @ காளிதாஸ்

    உங்கள் வருகைக்கு நன்றி.
    உங்கள் ரசனைக்கும் என் நன்றி.
    புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்.. :)

    பதிலளிநீக்கு
  3. இளங்கோ ஒரு வருடத்தில் 400௦௦ மற்றும் 500௦௦ கவிதைகளா!, சில கவிதைகளை மட்டுமே இன்று படிக்க முடிந்தது, முழுவதும் படித்து முடிக்க எனக்கு ஒரு மாதம் ஆகும், கவிதைகளின் தரத்தோடு ஒப்பிடுகையில் எண்ணிக்கை சாத்தியமில்லாத ஒன்று, எனக்கென்னவோ நீங்கள் உங்கள் profilil photographer என்று பொய் சொல்லிவிட்டீர்களோ என்று தோன்றுகிறது, உண்மையை சொல்லுங்கள் நீங்கள் கவிஞர் தானே?
    இக்கவிதையில் "துளையும்" புதிய சொல்லாக்கம் என்று நினைக்கிறேன், அருமை.

    பதிலளிநீக்கு
  4. @ கோநா..!
    உங்கள் தொடர்வாசிப்புக்கும் இனிய வாழ்த்துக்கும் நன்றி..!

    Profile-ல் சொல்லியிருப்பது உண்மை தான்.

    தொடர்ந்து கவிதை எழுத ஆரம்பித்தது மட்டுமே ஒரு விபத்து.
    ஆனால் அந்த விபத்து என் நகரம் சார்ந்த அழுத்தங்களுக்கான ஒரு வடிகாலாக அமைந்தது ஒரு தருணம்..
    தங்கள் பகிர்வுக்கு நன்றி..! :)

    பதிலளிநீக்கு