வெள்ளி, அக்டோபர் 29, 2010

இடைப்பட்ட தொலைவுகள்..

*
தனிமை அறைக்குள் நிகழ்ந்த
என் திடீர் பிரவேசத்தில்
பதறியோடி
அகன்ற மொசைக் தரையில்
பாதங்கள் வழுக்கி பக்கச் சுவரில் மோதி
கிறங்கிய நிலையில்
அப்படியே நின்றது
ஒரு
அணில் குட்டி

நானும் அசைவற்று நிற்கிறேன்

எனக்கும் அணில் குட்டிக்கும்
இடைப்பட்ட தொலைவை
அளந்தபடி
மெல்ல நகர்கிறது

ஐந்து பேர் கொண்ட
ஒரு
எறும்பு ஊர்வலம்..!

****

3 கருத்துகள்:

  1. இளங்கோ, "எனக்கும் அணில் குட்டிக்கும்
    இடைப்பட்ட தொலைவை" இந்த வரிகளில் மனதும் அசையாது நிற்கிறது, இடையில் ஊர்வலமாய் போகிறது இந்த ஐந்தாறு வரிகள்.

    பதிலளிநீக்கு
  2. @ கெளரி
    நன்றி..!
    @ கோநா
    நல்ல பகிர்வு. நல்ல பதிவு. ரசித்தேன்..
    நன்றி..! :)

    பதிலளிநீக்கு