சனி, அக்டோபர் 30, 2010

உதிரும் பாதைகள்

*
நெடுஞ்சாலை
ஓரிடத்தில் முடியும்போது

ஒற்றையடிப் பாதைகளின்
வரைபடம்
ஒன்றை
பரிசளிக்கிறாய்

இதுவரை
பறிக்கப்படாத மலர்கள்
ஒவ்வொன்றாய்
உதிர்கிறது
ரகசிய கிளையிலிருந்து

****

2 கருத்துகள்:

  1. இளங்கோ, மன்னிக்கவும், என் வாசிப்பில் இக்கவிதை சற்று குழப்புகிறது, தலைப்பின் அழுத்தத்தில், ஒரு பெரும் உறவு(வாழ்க்கைத் துணை?) சாத்தியமில்லையென தந்த சிறு உறவுகளுக்கான(நட்பு, குடும்ப நண்பர்?) வாய்ப்புகளை நிராகரிக்கும் ஒரு (எதிர்மறையான)சமரசமின்மையும்,
    கடைசி பத்தியில் உள்ள பறிக்கப் படாத மலர்கள் உதிர்கிறது என்ற வரிகளில் பெரும் உறவு தொடர இயலாவிடினும், சிறு உறவுகளின் வழியேனும் பெரும் அன்பு தொடர்வதற்கான வழிகள் திறந்திருப்பதான நேர்மறையான பொருளையும் தருகிறது.

    பதிலளிநீக்கு
  2. நன்றி..கோநா..
    கோநா.., உங்களின் நுணுக்கமான பார்வை கவிதையை, இன்னுமோர் ஒற்றையடிப் பாதையில் இட்டுச் செல்லுகிறது.
    மகிழ்ச்சி..
    அந்த சமரசமின்மை தான் பறிக்கப் படாத மலர்கள் உதிர்வதற்கான காரணியாக மாறுகிறது
    அவை ஏற்கனவே உள்ளன..
    ஆனால் இதுவரை பறிக்கப்படவில்லை..இப்போது தானாகவே உதிர்ந்து விடுதல் அவசியமாகிறது. அதுவும் எங்கிருந்து,,,? - ரகசிய கிளையிலிருந்து..

    பதிலளிநீக்கு