சனி, அக்டோபர் 30, 2010

யாரையும் யாவற்றையும் கடந்து போகுதல்..

*
ஒரு
திட்டமிட்ட சந்திப்புக்காக
புறப்படும் போது

நுண்ணிய துக்கத்தோடு தான்
கிளம்ப நேர்கிறது

சந்திப்புக்குப் பின்
கை குலுக்கி பிரியும்போதும்
ஒரு துக்கத்தோடு தான்
விலக முடிகிறது

யாரையும்
யாவற்றையும் கடந்து போகுதல்
படியப் போர்த்தும் துக்க நிழலாகிறது

துக்கத்திலிருந்து கடந்து போவது என்பது
நிகழவே வாய்ப்பில்லாத
ஒரு சந்திப்பைப் போல்
தருணங்களைப் பிணைத்துக் கொண்டு
அந்தரத்தில் தொங்குகிறது

யாருக்கும்
இடையூரில்லாமல்

****

2 கருத்துகள்:

  1. எல்லாவற்றையும் வாசித்து முடிக்கவில்லை... வருடமாகலாம்...வருடம் முழுதும் படிக்கப்போகிறேன் ... கவிமொழி கைவரப்பெற்று, படைப்பூக்கத்தின் உச்சத்தில் இருக்கும்போதுதான் இவ்வளவும் எழுதிக் குவிக்கமுடியும் எனப்படுகிறது... உளமார வாழ்த்துகிறேன்...நிறைய எழுதுங்கள்...படிக்க நானிருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வருகைக்கு ஓர் அழுத்தமான கை குலுக்கல் ராஜா..!
    உங்களின் வாழ்த்துக்கும் வார்த்தைகளுக்கும் ஒரு நெஞ்சார்ந்த நன்றி..!
    நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன்...என்கிற நம்பிக்கை இருக்கு..
    நன்றி..!

    பதிலளிநீக்கு