வெள்ளி, அக்டோபர் 29, 2010

கிட்டத்தட்ட பழைய உதடுகள்..

*
ஏறக்குறைய
எல்லாக் கவிதைகளும் எழுதப்பட்டுவிட்டது
என்கிறது புதியதாய் வாங்கிய பேனா

கிட்டத்தட்ட
எழுதப்பட்ட கவிதைகளெல்லாம்
வாசித்தாகிவிட்டது
என்கிறது பழைய உதடுகள்

ஒரு
சமரச உடன்படிக்கையில்
கையெழுத்திட சம்மதிக்கிறது
ஆரவாரமில்லாத
ஒற்றை மௌனம்..!

****

4 கருத்துகள்:

  1. கணந்தோறும் மாறும் மௌனங்களின் அர்த்தங்களே புதிய கவிதைகளைத் தரக்கூடியதாய் இருக்கிறதோ இளங்கோ?

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி கோநா..!
    எழுத எழுத தீர்ந்துபோகாத அர்த்தங்களை உள்ளடக்கி தொடர்வதாக இருக்கிறது எப்போதும் இந்த மௌனம்..

    பதிலளிநீக்கு
  3. ஆம் இளங்கோ, நான் கூறியதைவிட நீங்கள் கூறியதுதான் மௌனங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது. எவ்வளவு எழுதினாலும் மனதின் ஆழ மௌனத்தை வார்த்தைப் படுத்திவிட முடிவதில்லை, அந்த திருப்தி இன்மையே மீண்டும் மீண்டும் கலைஞனை தாகமுள்ளவனாக்கி முன்னெடுத்துச் செல்கிறது.

    பதிலளிநீக்கு
  4. உண்மை தான் கோநா..!
    மௌனம் ஒரு பாடுபொருளாக அடிக்கடி எழுதப்படுவது அதனால் தான் என நம்புகிறேன்..
    அது ஒரு பெருங்காடு...
    கையில் வரைபடம் இல்லாமல் அதனுள் நுழையத் துணிவது கவிஞனின் மனம் ஒன்றே எனக் கொள்ளலாம்..

    பதிலளிநீக்கு