சனி, அக்டோபர் 30, 2010

ஒரு நிழல்..

*
நிழல் பரவுகிறது

உன்
துரோகத்தை ஊடுருவி
உன்
மௌனத்தை சிவப்பேற்றி
உன்
வார்த்தைகளைத் தோலுரித்து
உன்
உரையாடலை சீர்குலைத்து
உன்
கோரிக்கைகளைப் போட்டுடைத்து

ஒரு
நிழல் பரவுகிறது
உன்
வெயிலை அழுந்த மிதித்து..

****

3 கருத்துகள்:

  1. புரிதலை அனைவரும் வெளிச்சம் வந்ததாகவே கூறுவர், நீங்கள் புரிதலை ஒரு நிலலாக்குவதன் மூலம், எத்தகைய புரிதல் என்பதை கூறிவிட்டீர்கள், துரோகமென்று, மேலும் புதுமையான "வெயிலை அழுந்த மிதித்த நிழல்" வாக்கியம் மூலம் மினுமினுப்புகள் காட்டிய மயக்கங்களை மூடியபடி அதன் மேல் "துரோகம் என்று புரிதல் நிழல் படிகிறது", அதனால் உண்மை வெளியில் தெரிகிறது என்று கூறுகிறீர்கள். சரியா இளங்கோ?
    நிறைய புதுமைகள்,அருமை

    பதிலளிநீக்கு
  2. ஏதாவது கவிதை எழுதறக்கான சாப்ட்வேர வெளிநாட்டுல இருந்து வாங்கி வச்சு இருக்கீங்களா இளங்கோ?
    இங்க ஒரு நாளைக்கு ஒன்னுக்கே, ஒன்னுக்கு போகவேண்டியிருக்கு நீங்க என்னடான்னா இப்டி பின்றீங்க.சந்தோசமாவும் இருக்கு, பொறாமையாவும் இருக்கு இளங்கோ.

    பதிலளிநீக்கு
  3. உங்களின் அன்புக்கும்..
    இந்த எழுத்து அடிப்படையிலான நட்புக்கும் நன்றி கோநா..!
    :)

    பதிலளிநீக்கு