சனி, அக்டோபர் 30, 2010

தளும்பி உடையும் நொடிகள்

*
தண்ணீர் நிரம்பிய
கண்ணாடிக் குவளை விளிம்பில்
ஓர் ஈ
உட்கார்வதும் எழுவதுமாய்
விளையாடுகிறது
ஓயாத நொடிகளை
உடைத்தபடி

காத்திருக்கும் துளிகள்
ஒவ்வொன்றும்
மேஜையின் மீது
தளும்புகிறது
உன் வரவை எதிர்கொள்ள

****

3 கருத்துகள்:

  1. இளங்கோ, முகமற்றவன் என்ற வார்த்தை இன்னும் சாதிக்காதவன் என்ற பொருளையும், பின்வரும் வரிகள் முதல் வாசிப்பில் வாய்ப்புக்கான அலைதலையும், வாங்கிப் பரிசீலனை செயாதவர்களையும்,
    இரண்டாம், மூன்றாம் வாசிப்புகளில் சமரசமின்மையால் யாரிடமும் வாய்ப்புக்காக த்ன் விண்ணப்பத்தைக் கொடுக்காமல் தன்னிடமே வைத்துக்கொள்ளும் ஒரு கோபக்கார இளைஞனையும் குறிப்பிடுகிறது. உங்கள் profileஇல் உள்ள சுயஅறிமுகம் சமரசமின்மையால் தன்னிடமே வைத்துக்கொள்ளும் கோபக்கார இளைஞனையே அதிகம் சுட்டுகிறது.
    சுயபுலம்பலோ?

    பதிலளிநீக்கு
  2. மன்னிக்க்கவும இளங்கோ, "கனத்த கோப்புகளின் உள்ளறை"க்கான பின்னூட்டம் இங்கு தவறுதலாக பதிவு செய்யப்பட்டுவிட்டது.
    இக்கவிதையின் இறுதிவரிகள் வருகையை உறுதிசெய்கின்றன, எனில் காத்திருத்தல், தளும்புதல் சுகமானதே

    பதிலளிநீக்கு