புதன், மார்ச் 31, 2010

ஆற்றுப் படுகை..

*

கோடை காய்ந்த
ஆற்றுப் படுகையை
நடந்து கடக்கையில்..

ஓரிடத்தில்
அகப்பட்டது..

கையகல நதி..!

***

5 கருத்துகள்:

  1. அன்புள்ள கவிதைக்கார நண்ப,

    தண்ணீரில்லாத ஆற்றைப் பற்றிய எளிமையாக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். அதையே மணலில்லாத ஆற்றுப் படுகையை கீழேயுள்ள வெண்பாவில் நான் சொல்லியிருக்கிறேன் !

    மனிதமே இல்லா மணற்கொள்ளை தானே
    தனிமனி தர்க்கரசே தந்தால் – இனிநிலவைக்
    கண்டுதான் என்றும் களித்திட காதலர்க்கு
    உண்டோ மணற்படு கை!

    நட்புடன்,
    வ.க.கன்னியப்பன்

    பதிலளிநீக்கு