திங்கள், மார்ச் 30, 2009

நிழல் கடக்கும் ரயில் பூச்சிகள்..!

*

மதில் தாண்டிய
உன் பார்வையில்..
பூனையின் நடை..

ஒரு
கீற்றுக் கிழியும்
லாவகத்தில்..
உன்
மறுப்பின் லயம்..!

இலைகளூடே..
பரவும் காற்று
சேமிக்கிறது..
உன்
புன்னகையின்..
இசைக் குறிப்பை..

நீயும்
நானும்
விட்டுச் சென்ற..
பாதச் சுவடுகளின்..
மனற்குழி நிழலை..

நின்று
தயங்கிக் கடக்கிறது..
ரயில் பூச்சியொன்று..!

*******
நன்றி : உயிரோசை / உயிர்மை.காம் - (13.4.09)

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1225

2 கருத்துகள்:

  1. இலைகளூடே..
    பரவும் காற்று
    சேமிக்கிறது..
    உன்
    புன்னகையின்..
    இசைக் குறிப்பை..

    நீயும்
    நானும்
    விட்டுச் சென்ற..
    பாதச் சுவடுகளின்..
    மனற்குழி நிழலை..




    வார்த்தைகளின் ஜாலம் அருமை

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கவிதை எம்மையும் கடலின் கரையோரத்தில் நடக்கவைத்திருக்கிறது ....

    பதிலளிநீக்கு