திங்கள், மார்ச் 30, 2009

அசைவுகளின் கரை..

*

அமைதியுற்று..
தளும்பும்
குளத்தின்..
நீர்
பரப்பில்..

அசையும்
பழுத்த..
அரசிலை மீது..

முன்னும் பின்னுமாய்..
நகரும்
எரும்பொன்றின்..

இதய அதிர்வு..

எதிர்க் கரையில்..
குதிக்கும்..
சிறுவனின்..
நீரலையை..
வேகமாய் இழுக்கிறது..
இக்கரை நோக்கி..!

******

1 கருத்து:

  1. ஆஹா எறும்பின் இதய துடிப்பிற்கு இப்படி ஒரு அழகு தங்களால் மட்டும்தான் கொடுக்க முடியும் .....

    பதிலளிநீக்கு